Monday, May 20, 2013

கவலைகளைத் தவிர்க்க என்ன செய்யலாம்?



இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தினமும் 18 மணி நேரம் உழைப்பாராம்.

 சூரியன் அஸ்தமிக்காத பேரரசின் அதிபருக்கு அந்த அளவுக்கு ஏராளமான பொறுப்புகள்.

அப்போது நிருபர்கள் அவரிடம், 'குவிந்துகிடக்கும் பணிச் சுமைகள் உங்கள் முகத்தில் சின்ன வருத்த ரேகையைக்கூடத் தோற்றுவிக்கவில்லையே... எப்படி?’ என்று கேட்டனராம்.

அதற்கு சர்ச்சில் சொல்லியிருக்கிறார்... 'எனக்குக் கவலைப்படுவதற்கே நேரம் இல்லை.’ (I am too busy to worry!) வேலை இல்லாதோரின் உள்ளம்தான், வேதனைகளின் வேட்டைக் காடு.

மறக்காதீர்கள்... மறந்தும் சும்மா இருக்காதீர்கள்!

ஆசுரா © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute